மோஹன், சேகர், கணேஷ் மூவரும் குல்லாய் வாங்கச் சென்றனர். குல்லாய்க் கடைக்காரர் அவர்கள் மூவரையும் மூன்று நாற்காலிகளில் ஒருவர் பின் ஒருவராக உட்கார வைத்தார். மோஹனால் சேகர், கணேஷ் இருவரின் குல்லாயையும் பார்க்க முடியும். சேகரால் கணேஷ் குல்லாயை மட்டும் பார்க்க முடியும். கணேஷ் மற்ற இருவரின் குல்லாயையும் பார்க்க முடியாது. கடைக்காரர் தன்னிடம் இருந்த மூன்று பச்சைக் குல்லாய்களையும் இரண்டு சிவப்புக் குல்லாய்களையும் காட்டினார். பின் மூவர் தலையிலும் குல்லாய் அணிவித்தார். மோஹனிடம் அவர் குல்லாய் என்ன நிறம் என்று கேட்டார். அவர் தெரியாது என்றார். சேகரும் அவ்வாறே சொன்னார். கணேஷிடம் அவரது தொப்பி நிறம் கேட்டதற்கு, அவர் தன் குல்லாய் நிறத்தைச் சரியாகச் சொல்லி விட்டார். கணேஷின் குல்லாய் என்ன நிறம்? அவர் எவ்வாறு அதைக் கண்டுபிடித்தார்?
Please send your answers through commentts (preferred) or by email to inamutham@gmail.com
மூலம்:
"பொது கல்லூரி கணிதம்", W. L. அய்ரஸ், க்ளியோடா G. ஃப்ரை, H. F. S ஜோனா, மெக்ரா ஹில் புத்தக கம்பெனி, 1952 p.35
Problem source:
"General College Mathematics", W. L. Ayres, Cleota G. Fry, H. F. S. Jonah, McGraw Hill Book Company, 1952 p.35
No comments :
Post a Comment