Friday, October 26, 2012

இன்று என்ன கிழமை?

நேற்று முன் தினம் நாளையாக இருந்தால் இன்று ஞாயிறு முதல் எத்தனை நாட்களோ அதே அளவு நாட்கள் நாளை மறுநாள் நேற்றாக இருக்கும் போதும் என்றால் இன்று என்ன கிழமை?

பி.கு:

சென்ற புதிர் (இங்கு பார்க்க) http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/blog-post.html
இதற்கு இன்னும் ஒருவரும் சரியான விடை கூறவில்லை - உங்கள் விடையை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Sunday, October 14, 2012

வேடிக்கைக் கணக்கு/புதிர்: தன்னின உண்ணிகளிடமிருந்து தப்புவது எப்படி?


ஐந்து வெள்ளையர்களும், ஐந்து பழங்குடியினரும் தன்னின உண்ணிகள் (cannibals)  வாழும்  இடத்தில் மாட்டிக் கொண்டனர்.  மிகவும் மன்றாடிய பின், த. உ. தலைவன், மாட்டிக் கொண்டவர்களில் ஐவரை மட்டுமே கொல்லச் சம்மதித்தான்.  ஐவரைப் பொறுக்க, 10-பேர்களையும் வட்டமாக நிறுத்தி, வந்தவர்களின் தலைவனை ஒரு எண் தேர்ந்தெடுத்து, ஒரு நபரையும் காட்டச் சொன்னான்.  அந்த எண் யாரிடம் முடிகிறதோ அவர் நீக்கிக் கொல்லப் படுவார்.  மீண்டும், விட்ட இடத்தில் தொடங்கி, அதே போல் அடுத்தவர் என்று ஐந்து பேர்கள் நீக்கிக் கொல்லப் படுவர். 

வெள்ளையர் சேர்ந்து, பழங்குடியினரை மாட்டிவிட ஒரு சதித்திட்டம் போட்டனர்.  ஆனால் அந்தோ பரிதாபம்!  தலைவன்  அந்தத் திட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், எண்ணும், தொடங்கும் நபரும் தவறாகக் கூறி விட்டான்.  அவன், கீழ்க்கண்ட படத்தில் உள்ளபடி 1-ம் எண்ணுடைய நபரில் ஆரம்பித்தான் - அதன் விளைவாக, மாட்டிக்கொண்ட ஐவரும் வெள்ளையர்களே!

வெள்ளையர் தலைவன் (1) எடுத்துக் கொண்ட எண் எது?  (2)  எந்த எண்ணும், தொடங்கும் இடமும் எதுவாகவும் இருந்தால்  அவர்கள் போட்ட சதித் திட்டம் நிறைவேறி இருக்கும்?






Just4Fun 6: How to Escape from Cannibals?

 
 
Problem source:

"General College Mathematics", W. L. Ayres, Cleota G. Fry, H. F. S. Jonah, McGraw Hill Book Company, 1952  p. 120


Solutions to the last puzzle:
http://puzzlesjust4fun.blogspot.com/2012/10/solutions-to-logic-and-math-puzzle-5.html
Congratulations to Participants: Prasad, T. V. Sivakumaran, Ramiah, Anthony. Kannan

கலைமொழி - மேல் நிலை 2

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 
இங்கு பார்க்கவும்:    (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)





 ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

சவால் அதிகமா?  எளிய புதிருக்கு இங்கு பார்க்கவும்: 
http://muthuputhir.blogspot.com/2012/10/15.html
 

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)   



கலைமொழி - மேல் நிலை 1   விடை:

ஆசைக்கோர் அளவில்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினுங் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் 

தாயுமானவர் பாடல்:
ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
       ஆளினுங் கடல்மீதிலே
    ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
       அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்


       நெடுநா ளிருந்தபேரும் 
     நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
        நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
       உறங்குவது மாகமுடியும்
   உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
      ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
       பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
       பரிபூர ணானந்தமே.10 .



சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  5 பேர்) 

யோசிப்பவர், ராமராவ், நாகராஜன், மாதவ், வேதா, ராமச்சந்திரன்

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!