ஐந்து வெள்ளையர்களும், ஐந்து பழங்குடியினரும் தன்னின உண்ணிகள் (cannibals) வாழும் இடத்தில் மாட்டிக் கொண்டனர். மிகவும் மன்றாடிய பின், த. உ. தலைவன், மாட்டிக் கொண்டவர்களில் ஐவரை மட்டுமே கொல்லச் சம்மதித்தான். ஐவரைப் பொறுக்க, 10-பேர்களையும் வட்டமாக நிறுத்தி, வந்தவர்களின் தலைவனை ஒரு எண் தேர்ந்தெடுத்து, ஒரு நபரையும் காட்டச் சொன்னான். அந்த எண் யாரிடம் முடிகிறதோ அவர் நீக்கிக் கொல்லப் படுவார். மீண்டும், விட்ட இடத்தில் தொடங்கி, அதே போல் அடுத்தவர் என்று ஐந்து பேர்கள் நீக்கிக் கொல்லப் படுவர்.
வெள்ளையர் சேர்ந்து, பழங்குடியினரை மாட்டிவிட ஒரு சதித்திட்டம் போட்டனர். ஆனால் அந்தோ பரிதாபம்! தலைவன் அந்தத் திட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், எண்ணும், தொடங்கும் நபரும் தவறாகக் கூறி விட்டான். அவன், கீழ்க்கண்ட படத்தில் உள்ளபடி 1-ம் எண்ணுடைய நபரில் ஆரம்பித்தான் - அதன் விளைவாக, மாட்டிக்கொண்ட ஐவரும் வெள்ளையர்களே!
வெள்ளையர் தலைவன் (1) எடுத்துக் கொண்ட எண் எது? (2) எந்த எண்ணும், தொடங்கும் இடமும் எதுவாகவும் இருந்தால் அவர்கள் போட்ட சதித் திட்டம் நிறைவேறி இருக்கும்?

No comments :
Post a Comment