Sunday, September 9, 2012

வேடிக்கைக் கணக்கு 3: விரல் விட்டுப் பெருக்குதல்



ஒரு பழங்குடி (அமெரிக்க) இந்தியர் எண்கள் 5 முதல் 10 வரை விரல் விட்டுப் பெருக்கும் முறை ஒன்று பயன்படுத்துவர்.  அவர்கள் முறை இதுதான்: ஒரு கையில், கொடுத்த எண்ணிலிருந்து 5-ஐக் கழித்து வரும் எண்ணுக்குச் சமமான விரல்களை நீட்டிக்கொள்வர். மற்ற கையிலும் அதேபோல அடுத்த எண்ணிலிருந்து 5-ஐக் கழித்து வரும் எண்ணுக்குச் சமமான விரல்களை நீட்டிக் கொள்வர். விரிக்கப்பட்ட விரல்களின் கூட்டுத் தொகை விடையின் முதல் எண்ணைக் (10-ஸ்தானம்) கொடுக்கிறது, மற்றும் மடங்கியிருக்கும் விரல்களின் பெருக்குத் தொகை விடையின் இரண்டாவது (ஒன்று ஸ்தானம்) எண்ணைக் கொடுக்கும்.

உதாரணமாக, 8-ஐ 6-ஆல் பெருக்க விரும்பினால், நாம் ஒரு கையில் 3 விரல்கள் மற்றும் மறு கையில் 1 விரல் நீட்டிக் கொள்ளவேண்டும்.  பின்னர் நீட்டப்பட்ட விரல்கள் தொகை 3 +1= 4 , மற்றும் மடங்கியிருக்கும் விரல்களின் பெருக்குத் தொகை 2 x 4 = 8  ஆகும் கிடைக்க வேண்டிய விடை 48, என்று வருகிறது.

இந்த முறை கணித அடிப்படையில் சரியானது என்று விளக்க முடியுமா?

3 comments :

  1. Take the numbers as x,y

    For the first digit (10s place) what you are doing is sub both nos by 5 and then add them
    i.e (x-5) + (y-5)

    For the second digit (1s place), 5 minus above 2 nos are multiplied. i.e. (5-(x-5)) * (5-(y-5))
    i.e (10-x)*(10-Y)

    Now 10 * 10s place no + 1s place no
    =( 10* ((x-5) + (y-5))) + ((10-x)*(10-y))
    = (10x + 10y -100) + (100 - 10x -10y + xy)
    = xy
    which is multiplication of two numbers!

    ReplyDelete
  2. Simple Algebra,
    Lets put 5 as a.

    what we normally do is 8x6 =48.

    Lets say a = 5, b and c are count of extended fingers on each hand, then

    it is (a+b) * (a+c)

    Now we have to prove,
    (a+b) * (a+c) = 10 * (b+c) + (a-b) * (a-c).
    what we do = what Amer. Indian do


    Replace 10 by 2a and RHS is equal to LHS.

    a^2 + ab + ac + bc = 2ab + 2ac + a^2 - ba - ca + cb

    Nice and interesting, thought for a while whether we can use it for higher numbers like closer to 90s. 87 * 92 will be (37+42)*100 + 8 * 13 = 8004. (here 50 is the base)

    ReplyDelete
  3. SriDevi, Yosippavar, Anthony,

    Your answer is correct. Congratulations and thanks.

    ReplyDelete