Wednesday, July 2, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூலை

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

காகிதத்தில் படிவம் எடுத்து விடைகள் பூர்த்தி செய்ய விரும்புவோருக்கு:
http://tinyurl.com/july2014xwd

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
http://www.thamilworld.com/forum/index.php?showforum=72 குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூலை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
1. உணவாக்கி சுடுங்கருவி. (5)
4.யானையில் மூன்றில் ஒன்று - இது யானைக்கும் சறுக்கும்! (2)
6.பாதி திருவடி தொடர்ந்த பாதியில் பாதி வெள்ளம் வடியும் வழி. (4)
7.நூற்றுவர் தலைவனுடன் சேர்ந்து வந்த பாதி குலதிலகம் புத்தகங்கள் நிறைந்தவன். (4)
9.புதின தாது பழசானதில்லை. (5)
12.வருமானம் பெறுவார் பெறுமானம் குறைந்தால் போகார். (4)
14.கோணி தைக்க குத்தல் பாதி முழுவதும் தூசி. (4)
17. நரம்பு விரும்பி. (2)
18.பிரண்ட வம்சத்து சாரம். (5)

நெடுக்காக:
1.தேங்காயைப் பொடியாக்க உத்தானபாதன் மகனால் முடியவில்லை! (3)
2.செல்லப் பெண் பெயர் செவி சாய்த்துக் கேட்டால் காப்பாற்றப் படுவாய். (5)
3.கிளியின் இடை மறைத்த உறவு. (2)
4. முடியாத துன்பம் பாலக்காட்டு ஐயர் சொல்வது இல்லை (3) (பேச்சு வழக்கு)
5.அச்சம் பாதி அறிவு பாதி ஒத்துக்கொள். (4)
7.புதுமையான நூல் தனம் முடிவுகளை நீக்கு. (3)
8.சிவன். நடு நீக்கினாலும் சிவன். (4)
10.விதி மாறிய விகார் கல்மாடி கொண்டது. (3)
11.அது மாறி அடித்தது மனம் பதைத்தது. (5)
13.சென்னையில் (இன்னொரு) தடவை காய்ச்சி. (3)
15.என்னை நடுவே இழுத்த சின்னம் தரும் சீற்றம். (3)
16.அப்ப முதல் முதல் பூதலம் சரிசெய். (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, June 3, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூன்

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

படிவம் எடுத்து புதிரை விடுவிக்கத் தோதான உருவத்திற்கு:  http://tinyurl.com/juneXword

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
http://www.thamilworld.com/forum/index.php?showforum=72
குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூன்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
5.குளத்தடி கரைகளிலே அருந்து. (2)
6.பதட்டம் குறைந்தால் குறைதல் குறைந்தால் விளையாட்டு. (6)
7.நித்தம் வரும் நிலவு வருத்தம் போக்கித் தரும் மன அமைதி. (4)
8.முதல் முதல் தொடர்ந்த தலை தண்ணீரில் பேராபத்து. (3)
9.முக்கனியில் ஒன்று குறைவது ஆதாயமா? (3)
11.வந்த தலைவர் நுழைந்த போது செல்வது. (3)
13.சாதாக்கம்மல் சாமம் கழிந்தால் செய்தி. (4)(அகராதி உதவும்)
16.பொருள் ஈட்டிய நெல் தகரங்கள். (6)
17.சற்றே பொறு, தோழி! (2)

நெடுக்காக:
1.சிகையும் தீரும். (4)
2.பயங்கர சூழலிலா ஸ்வரம் கூடிய தீபாராதனை? (5)
3.கை இழந்த தாமரைக் கால் பால் தரும் பருப்பு. (3)
4.பின்னால் வராத தொண்டரை கவராத கண்வரை மறை. (4)
10.திங்கள் தோறும் நான்கு வாரத்தில் திரும்பிய தாய். (5)
12.சிவபுரம் நுழைவாயில் தெரியாமல் குழம்பும் எல்லை. (4)
14.கண்ணன் உடல் நீக்கி அம்சம் உடல் சேர்த்த மாமன். (4)
15.ஊர் விட்டு வந்த நீதிபதியா? இது நியாயமா? (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Friday, October 26, 2012

இன்று என்ன கிழமை?

நேற்று முன் தினம் நாளையாக இருந்தால் இன்று ஞாயிறு முதல் எத்தனை நாட்களோ அதே அளவு நாட்கள் நாளை மறுநாள் நேற்றாக இருக்கும் போதும் என்றால் இன்று என்ன கிழமை?

பி.கு:

சென்ற புதிர் (இங்கு பார்க்க) http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/blog-post.html
இதற்கு இன்னும் ஒருவரும் சரியான விடை கூறவில்லை - உங்கள் விடையை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Sunday, October 14, 2012

வேடிக்கைக் கணக்கு/புதிர்: தன்னின உண்ணிகளிடமிருந்து தப்புவது எப்படி?

ஐந்து வெள்ளையர்களும், ஐந்து பழங்குடியினரும் தன்னின உண்ணிகள் (cannibals)  வாழும்  இடத்தில் மாட்டிக் கொண்டனர்.  மிகவும் மன்றாடிய பின், த. உ. தலைவன், மாட்டிக் கொண்டவர்களில் ஐவரை மட்டுமே கொல்லச் சம்மதித்தான்.  ஐவரைப் பொறுக்க, 10-பேர்களையும் வட்டமாக நிறுத்தி, வந்தவர்களின் தலைவனை ஒரு எண் தேர்ந்தெடுத்து, ஒரு நபரையும் காட்டச் சொன்னான்.  அந்த எண் யாரிடம் முடிகிறதோ அவர் நீக்கிக் கொல்லப் படுவார்.  மீண்டும், விட்ட இடத்தில் தொடங்கி, அதே போல் அடுத்தவர் என்று ஐந்து பேர்கள் நீக்கிக் கொல்லப் படுவர். 

வெள்ளையர் சேர்ந்து, பழங்குடியினரை மாட்டிவிட ஒரு சதித்திட்டம் போட்டனர்.  ஆனால் அந்தோ பரிதாபம்!  தலைவன்  அந்தத் திட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், எண்ணும், தொடங்கும் நபரும் தவறாகக் கூறி விட்டான்.  அவன், கீழ்க்கண்ட படத்தில் உள்ளபடி 1-ம் எண்ணுடைய நபரில் ஆரம்பித்தான் - அதன் விளைவாக, மாட்டிக்கொண்ட ஐவரும் வெள்ளையர்களே!

வெள்ளையர் தலைவன் (1) எடுத்துக் கொண்ட எண் எது?  (2)  எந்த எண்ணும், தொடங்கும் இடமும் எதுவாகவும் இருந்தால்  அவர்கள் போட்ட சதித் திட்டம் நிறைவேறி இருக்கும்?

Just4Fun 6: How to Escape from Cannibals?

Problem source:

"General College Mathematics", W. L. Ayres, Cleota G. Fry, H. F. S. Jonah, McGraw Hill Book Company, 1952  p. 120

Solutions to the last puzzle:
http://puzzlesjust4fun.blogspot.com/2012/10/solutions-to-logic-and-math-puzzle-5.html
Congratulations to Participants: Prasad, T. V. Sivakumaran, Ramiah, Anthony. Kannan

கலைமொழி - மேல் நிலை 2

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 
இங்கு பார்க்கவும்:    (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

 ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

சவால் அதிகமா?  எளிய புதிருக்கு இங்கு பார்க்கவும்: 
http://muthuputhir.blogspot.com/2012/10/15.html
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)   

கலைமொழி - மேல் நிலை 1   விடை:

ஆசைக்கோர் அளவில்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினுங் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் 

தாயுமானவர் பாடல்:
ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
       ஆளினுங் கடல்மீதிலே
    ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
       அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

       நெடுநா ளிருந்தபேரும் 
     நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
        நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
       உறங்குவது மாகமுடியும்
   உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
      ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
       பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
       பரிபூர ணானந்தமே.10 .

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  5 பேர்) 

யோசிப்பவர், ராமராவ், நாகராஜன், மாதவ், வேதா, ராமச்சந்திரன்

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

Thursday, September 27, 2012

வேடிக்கைக் கணக்கு/புதிர் 5: படகுகள் கடப்பது எப்படி?

Problem source:

"General College Mathematics", W. L. Ayres, Cleota G. Fry, H. F. S. Jonah, McGraw Hill Book Company, 1952  p. 120

ஓர் ஆற்றின் குறுகலான பகுதியில் படகுகள் சந்திக்கின்றன.  3 படகுகள் ஆற்றுப் போக்கிலும், 3 எதிர் நோக்கியும் செல்ல வேண்டும்.  அவை சந்திக்கும் பகுதியில் இரண்டு படகுகள் அடுத்தடுத்துச் செல்ல முடியாது.  ஆனால், அங்கு ஒரு படகு மட்டும் ஒதுங்கும் அளவிற்கு பக்கத்தில் இடம் இருக்கிறது (படத்தைப் பார்க்கவும்).

இந்த 6 படகுகளும் ஒன்றையொன்று கடந்து தத்தம் வழி செல்வது எப்படி?